PUBLISHED ON : செப் 08, 2024 12:00 AM

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடந்த விழாவில், ஜெ., பேரவை மாநில இணை செயலர் குணசேகரன் பேசுகையில், 'நான் கட்சியில் சேர்ந்து ஆர்வமாக பணியாற்றினேன். அ.தி.மு.க.,வில் அடையாள அட்டை வைத்திருப்பது பெரிய சொத்தாக கருதப்படும்.
'ஆனால், ஆறு ஆண்டுகளாக விண்ணப்பித்தும் அடையாள அட்டை கிடைக்கவில்லை. அதற்கு பின் தான், அரசியல் செய்ய ஆரம்பித்தேன். பகுதி செயலர் பதவியை பிடித்த பின் தான், அடையாளம் கிடைத்தது. முழு நேரமும் அரசியல் செய்ததால் தான், இன்று மாநில பொறுப்புக்கு வந்திருக்கிறேன்' என்றார்.
இதை கேட்ட ஒரு தொண்டர், 'அரசியலிலும், 'பாலிடிக்ஸ்' பண்ணினா தான் பதவியே கிடைக்கும்னு தெளிவா சொல்லிட்டாரு...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.