PUBLISHED ON : ஆக 27, 2024 12:00 AM

கோவை, ஈஷா யோகா மையம் சார்பில் நடந்த, 'அக்ரி ஸ்டார்ட் அப்' கண்காட்சியில், கோவை மாவட்ட சிறு தொழில் சங்கமான, 'கொடிசியா' முன்னாள் தலைவர் வரதராஜன் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'தொழில் துவங்குவது அவ்வளவு எளிதல்ல. பூனையை பிடிக்க எலிக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டுமோ, அவ்வளவுதைரியம் வேண்டும். முன்பெல்லாம், 10,000 - 20,000 முதலீடு செய்து தொழில் துவங்கியோர், 25 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாயில் வணிகம் செய்கின்றனர். ஆனால், விவசாயம் பார்த்தவர்களின் நிலை, 50 ஆண்டுகளாக இன்னும் அப்படியே தான் இருக்கிறது' என, ஆதங்கப்பட்டார்.
இதை கேட்ட விவசாயி ஒருவர், 'மற்ற தொழில்களில், தங்கள் பொருளுக்கு விலையை அவர்கள் நிர்ணயித்து லாபம் பார்க்கலாம்... விவசாயி அப்படி இல்லையே... சாண் எறினால் முழம் சறுக்கும் கதை தானே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.

