PUBLISHED ON : மார் 13, 2025 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே பாடியநல்லுாரில், முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'முன்பெல்லாம் வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல உடை உடுத்தி, தலைக்கு ரப்பர் பேண்ட் போட்டு, ஹீல்ஸ் செருப்பு, ஹேண்ட் பேக் மாட்டிக் கொண்டு, மாமியார், மாமனார், கணவனிடம் சென்று பேருந்துக்கு பணம் கேட்டு கையேந்தும் நிலை இருந்தது.
'தற்போது, அவர்களுக்கு இலவச பஸ் பயணம் கிடைத்துள்ளது. பெண்கள் எல்லாம் பேருந்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை கண்டு, டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொள்ளும் ஆண்கள் பொறாமைப்படுகின்றனர்...' என்றார்.
இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'அடுத்த தேர்தல்ல ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்னு அறிவிச்சிட வேண்டியது தானே...' என முணுமுணுக்க, அவரது நண்பர், 'போக்குவரத்து கழகங்களை இழுத்து மூட யோசனை சொல்றியா...?' என, புலம்பியபடியே நடந்தார்.