PUBLISHED ON : ஜூன் 27, 2024 12:00 AM

கவுண்டம்பாளையம் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ரஞ்சித், தன் படக் குழுவினருடன் கோவை, கோனியம்மன் கோவிலில், தரிசனம் செய்தார்.
அப்போது கூறுகையில், 'சுயமரியாதை திருமணம் என சொல்லி, எவ்வளவு கொடுமைகள் திருநெல்வேலியில் நடந்துள்ளன. சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கோபம் வரும். சுயமரியாதை, சமூக நீதி பேசுபவர்கள், முதலில் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்து, மற்ற பெண்களுக்கு பின்னர் செய்து வைக்கட்டும்.
'பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்கக் கூடாது என, சட்டம் கொண்டு வர வேண்டும். நாடக காதலை பற்றி பேசினால் என்னை ஜாதி வெறியனாக பார்க்கின்றனர். இதற்காக என்னை எதிர்த்தால், நான் ஜாதி வெறியன் தான்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'ஜூலை முதல் வாரம் இவரது படம் ரிலீஸ் ஆக போகுது... இந்த நேரத்துல ஆவேசமா பேசினால் தானே படத்துக்கும் விளம்பரம் கிடைக்கும்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.