தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'ஜால்ரா போடுற தைரியம் தான்!'

'ஜால்ரா போடுற தைரியம் தான்!'

'ஜால்ரா போடுற தைரியம் தான்!'


PUBLISHED ON : மே 13, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின், 41வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடந்தது. அந்த அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, அவரது மகன் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான பிரபாகர் ராஜா ஆகியோர் வீடு, சென்னை கே.கே.நகரில் இருப்பதால், இந்த மாநாட்டிற்கான பேனர்கள், அவர்கள் வீடு உள்ள கோடம்பாக்கம் மண்டலத்தின் பல இடங்களில் வைக்கப்பட்டன.

இவற்றை அனுமதி பெறாமல் வைத்ததாக, மாநகராட்சி உதவி பொறியாளர் ஒருவர் அகற்றவே, ஆத்திரமடைந்த பிரபாகர் ராஜா ஆதரவாளர்கள், அரசு அதிகாரி என்றும் பாராமல் உதவி பொறியாளரை கன்னத்தில் அறைந்தனர். மேலும், போலீசில் புகார் அளிக்கக்கூடாது என்றும் அவரை மிரட்டினர்.

இதையறிந்த சக மாநகராட்சி ஊழியர்கள், 'ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடுற தைரியத்துல தான், வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள், அரசு அதிகாரியை அடிக்கும் அளவுக்கு வந்து விட்டனர்...' என, முணுமுணுக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us