PUBLISHED ON : ஆக 01, 2024 12:00 AM

சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டல குழு கூட்டத்தில், 67வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தாவூத் பி பேசுகையில், 'என் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் எந்த வேலையை செய்ய சொன்னாலும், வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் பணிகள் நடைபெறும் என்கிறீர்கள். வார்டில் குடிநீர் குழாய் சேதமாகியுள்ளது. மாற்றித்தர கோரினோம்; குடிநீர் வாரியம் செவி சாய்க்கவில்லை' என்றார்.
இதற்கு பதிலளித்த குடிநீர் வாரிய அதிகாரி, 'பழைய குழாயை பழுது நீக்க நிதி உள்ளது. 200 மீட்டர் துாரத்திற்கு புதிய குழாய் பதிக்க நிதியில்லை. நீங்கள் குறிப்பிட்ட பகுதி குழாயில் சேதம் இல்லை' என்றார்.
இதைக் கேட்ட கவுன்சிலர், 'அப்படி என்றால் இப்ப இருக்கிற குழாயை உடைத்து விட்டால், புதிதாக போட்டுத் தருவீர்களா...?' என்றார். இதைக் கேட்ட அதிகாரி ஒருவர், 'கிராஸ் கேள்வி கேட்குறாரே... பேசாம செஞ்சு தர்றோம்னு சொல்லிட்டு, 'எஸ்கேப்' ஆக வேண்டியது தான்...' என, முணுமுணுத்தார்.