PUBLISHED ON : ஏப் 03, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய சென்னை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தயாநிதியை ஆதரித்து, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், ராயப்பேட்டையில் நடந்தது.
காங்., மாவட்ட தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான சிவராஜசேகரன் பேசுகையில், 'மக்கள் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் தயாநிதி. கவுன்சிலர் என்ற முறையில், அவரிடம் நான் கேட்ட சில பணிகளை எம்.பி., மேம்பாட்டு நிதியில் செய்து கொடுத்தார். லயோலா கல்லுாரியில் கட்சி நிர்வாகிகளின் பிள்ளைகள் படிக்க, அட்மிஷன் வாங்கி தந்துள்ளார்' என, பாராட்டி பேசினார்.
இதைக் கேட்ட காங்., தொண்டர் ஒருவர், 'இன்னும் 20 நாட்களுக்கு நம்ம வேட்பாளர் பிரசாரம் செய்யணும்... இவர் வைக்கிற ஐஸ்ல அவருக்கு ஜலதோஷம் பிடிச்சிடும் போல...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.

