PUBLISHED ON : ஜூலை 11, 2024 12:00 AM

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், தி.மு.க., அரசை கண்டித்து, இளைஞர்கள் எழுச்சிப்படை என்ற அமைப்பின் இளம் வக்கீல்கள் சங்கம் சார்பில், செங்கல்பட்டு, பழைய ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டம் அதிகமாக வரும் எனக் கருதி, அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செய்தி சேகரிக்க, 10க்கும் மேற்பட்ட நிருபர்களும் அங்கு குவிந்தனர். ஆனால், 10க்கும் குறைவான நபர்களே ஆர்ப்பாட்டத்திற்கு வந்தனர். அவர்களும் கூலி தொழிலாளர்கள் போல லுங்கி, டிரவுசர், சட்டை அணிந்திருந்தனர்.
இதைப் பார்த்த போலீஸ் அதிகாரி ஒருவர், 'வக்கீல்கள் எல்லாம் அங்கி தானே அணிந்திருப்பாங்க... இவங்க எல்லாம் லுங்கி கட்டியிருக்காங்களே... உண்மையில் இவங்க வக்கீல்கள் தானா...?' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.