PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய இரு பெரிய விசைப்படகு, 'மேகலா' என்ற சிறிய விசைப்படகு உள்ளது; இவை, அணை வலதுகரை பகுதியில் நிறுத்தி வைக்கப்படும். மேட்டூர் அணை முழுதுமாக நிரம்பிய நிலையில், திடீரென மேகலா படகு மாயமானது.
தகவலறிந்து நீர்வளத்துறை பொறியாளர்கள், ஊழியர்கள், அணை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள முன்னாள் படை வீரர்கள் என, அனைவரும் அதிர்ச்சிஅடைந்தனர். அணை நீர்பரப்பு பகுதியில் முழுவீச்சில் தேடிய நிலையில், திப்பம்பட்டி நீர்பரப்பு பகுதியில் படகு நிற்பது தெரியவந்தது.
அதை ஊழியர்கள் மீட்டு வந்தனர். ஊழியர்கள் முறையாக கம்பியில் இணைத்து படகை கட்டாததால், நீர்வழிப் பாதையில் தான் போன போக்கில் மேகலா சென்றது தெரியவந்தது. அணை நிரம்பிய மகிழ்ச்சியிலும், அதிகாரிகளை மேகலா படகு மெர்சலாக்கி விட்டது.