தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'ஓடி, ஒளிய வேண்டியதில்லையே!'

'ஓடி, ஒளிய வேண்டியதில்லையே!'

'ஓடி, ஒளிய வேண்டியதில்லையே!'


PUBLISHED ON : மே 15, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 15, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர் மாவட்டத்தில், எப்போது பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானாலும், பத்திரிகையாளர்களுக்கு, பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் அடங்கிய பட்டியலை முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் வழங்குவது வழக்கம். ஆனால், இம்முறை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான போது, அந்த விபரங்கள் வழங்கப்படவில்லை.

இதற்கு, கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 16வது இடத்தில் இருந்த தஞ்சாவூர், இந்தாண்டு 26வது இடத்திற்கு சென்றது தான் காரணம். மேலும், அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை வெறும் எட்டு பள்ளிகள் மட்டுமே எடுத்திருந்தன.

பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், பொறுப்பு அமைச்சராக உள்ள மாவட்டத்தில், தேர்ச்சி சதவீதம் இப்படி சரிந்ததால் தான் எந்த தகவலையும் அதிகாரிகள் வழங்கவில்லை என, கூறப்பட்டது.

நிருபர்கள் சிலர், 'கல்வியாண்டு துவக்கத்தில் இருந்தே மாணவர்கள் மீது கவனம் செலுத்தி இருந்தால், இப்ப ஓடி, ஒளிய வேண்டியதில்லையே...' என, முணுமுணுத்தவாறு நடந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us