PUBLISHED ON : ஏப் 19, 2024 12:00 AM

கரூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கீழப்பழுவஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது திறந்த வாகனத்தில் நின்று பேசிய அவர், 'கை சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும்' எனக் கூறி, அங்கிருந்த வாக்காளர்களிடம் தனது கையை உயர்த்தி காட்டினார்.
அப்போது, அவரது அருகில் இருந்த அன்னவாசல் ஒன்றிய தி.மு.க., செயலர் சந்திரன், கை சின்னத்திற்கு பதிலாக, இரட்டை விரலை அசைத்து காட்டி ஓட்டு சேகரித்தார்.
இதைக் கண்ட அமைச்சர் மெய்யநாதன் பதறி போய், சந்திரன் கையை தட்டிவிட்டு, கை சின்னத்தை காட்டுமாறு கண்டித்தார். சுதாரித்த சந்திரன் கையை அசைத்து, ஓட்டு சேகரித்தார்.
காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், 'உண்மையில் சந்திரன் இரட்டை விரலை காட்டியது எதார்த்தமா அல்லது ஜோதிமணி மீதான காட்டமா...?' என, புலம்பியபடி நடந்தார்.

