PUBLISHED ON : ஆக 12, 2024 12:00 AM

சென்னை, ஆவடி மாநகராட்சி, எம்.ஜி.ஆர்., திடலில், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, ஆவடி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., நாசர் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'தனக்கு ஆதரவு தரும் மாநிலங்களுக்கு அள்ளி கொடுத்த மிகப்பெரிய கொடை வள்ளல் மோடி... அவர் ஒரு உருப்படாத முதல்வர்' என்றார். பிரதமர் மோடியை, முதல்வர் என உளறியதை அறிந்து சிரித்துக் கொண்ட அவர், 'நான் தப்பா பேசினதை மட்டும் பத்திரிகையாளர்கள் நாளைக்கு செய்தியா போடுவாங்க பாருங்க...' என, அருகில் இருந்தவரிடம் கூறி, கமுக்கமாக சிரித்தார்.
இதை கவனித்த கட்சி நிர்வாகி ஒருவர், 'அப்ப, அண்ணன் உளறலையா... வேணும்னு தான் பேசினாரா...' என முணுமுணுக்க, மற்றொரு நிர்வாகி, 'அமைச்சர் பதவி போயிடுச்சி... இனி, போறதுக்கு ஒண்ணுமில்லைனு, நம்ம தல பேச்சுல, 'தில்'ல பாத்தியா...' என, பெருமை பேசியபடி நடந்தார்.

