PUBLISHED ON : ஆக 21, 2024 12:00 AM

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் தலைமை வகித்தார்.
இதில், வட்டார வாரியாக விவசாயிகள், தங்கள் குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. விவசாயிகளில் சிலர், 'வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தை வளமாக்க வந்த பஞ்சாப் சிங்கமே... பால் வடியும் முகம் கொண்டவரே... எங்கள் துயர் நீக்க வந்தவரே...' என, எதுகை, மோனையில் கலெக்டருக்கு, 'ஐஸ்' வைத்தனர்.
இதை கேட்டு ரசித்த கலெக்டர் சிரித்தவாறு,'விவசாயிகளின் மனுக்களை பரிசீலனை செய்து முடியும், முடியாது என, தெளிவாக அதிகாரிகள் கூற வேண்டும்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இந்த மாதிரி ஐஸ் எல்லாம்அரசியல்வாதிகளுக்கு தானே வைப்பாங்க...' என முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'ஒருவேளை மாவட்ட அமைச்சரை பார்த்துட்டு, நேரா கலெக்டரை பார்க்க வந்துட்டாங்க போல... அதான், அதே ஸ்ருதியில்பாடுறாங்க...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.