PUBLISHED ON : செப் 06, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது.
இதில், அமைப்பின் மாநில துணை தலைவர் மாது பேசுகையில், 'தி.மு.க., அரசு தேர்தல் நேரத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் ஓட்டுகளை பெற, 70 வயதான ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல்ஓய்வூதியம் வழங்கப்படும் என, வாக்குறுதி அளித்தது. அதை நம்பி ஓட்டு போட்டோம். அவர்கள் ஆட்சியை பிடித்து, மூன்று ஆண்டுகள்கடந்து விட்டன. எப்போது தான் தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்ற போகின்றனரோ தெரியவில்லை' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஓய்வூதியர் ஒருவர்,'அவங்க வாக்குறுதியை நம்பி நாம ஓட்டு போட்டோம்... ஆட்சிக்கு வந்து, நமக்கு அல்வா தான் தந்தனர்...' என, முணுமுணுத்தபடியே நடையை கட்டினார்.