PUBLISHED ON : ஜூலை 21, 2024 12:00 AM

தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில், கோத்ரெஜ் குழுமம் சார்பில், பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையத்தை, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துவக்கி வைத்தார்.
விழா மேடையில், விவசாயிகள் பலர் ராஜாவுக்கு சால்வை அணிவித்தனர். ராஜா பேசுவதற்கு முன், அங்கிருந்த விவசாயி ஒருவரிடம், 'அண்ணே நிகழ்ச்சி முடிந்ததும் தந்து விடுகிறேன்' எனக் கூறி, அவர் கழுத்தில் போட்டிருந்த பச்சை துண்டை கடன் வாங்கி, தன் கழுத்தில் போட்டுக் கொண்டு பேச்சை துவக்கினார்.
இதைப் பார்த்த தஞ்சாவூர் எம்.பி., முரசொலி மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் சிரித்தனர். குசும்புக்கார விவசாயி ஒருவர், 'என்ன தான் தம்பி பெரிய படிப்பெல்லாம் படிச்சாலும், அரசியலுக்கு வந்ததும், எங்க, என்ன மாதிரி வேஷம் போடணும்னு கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்கு... இந்த புள்ள பிழைச்சிக்கும்...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.