/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'கட்சி மாயமாகாமல் இருந்தால் சரி!'
/
'கட்சி மாயமாகாமல் இருந்தால் சரி!'
PUBLISHED ON : செப் 04, 2024 12:00 AM

கோவை மாவட்டம், வால்பாறையில் நடந்த அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி பங்கேற்றார். அப்போது பேசுகையில், 'லோக்சபா தேர்தலில், வால்பாறை மலைப் பகுதியில், கட்சி நிர்வாகிகளின் அலட்சியத்தால் தான் ஓட்டு வங்கி சரிந்தது. பல பூத்துகளில் பா.ஜ.,வை விட, அ.தி.மு.க., ஓட்டு குறைந்தது வேதனையாக உள்ளது. இங்கு கட்சிக்கு, 18,000 உறுப்பினர்கள் உள்ளனர். லோக்சபா தேர்தலில், 6,000 ஓட்டு மட்டுமே நமக்கு கிடைத்தது; மீதமுள்ள, 12,000 ஓட்டுகள் எங்கே போச்சு...' என்றார்.
இதைக் கேட்ட கட்சி நிர்வாகி ஒருவர், 'எப்பவும் கைகொடுக்கற கொங்கு மண்டலத்துலயே இந்த நிலைன்னா, மற்ற மாவட்டங்கள் நிலை பரிதாபம் தான்...' என முணுமுணுக்க, மற்றொரு நிர்வாகி, 'இப்ப நம்ம ஓட்டுகள் தான் மாயமாச்சு... அடுத்த தேர்தலில் கட்சி மாயமாகாமல் இருந்தால் சரி...' என, புலம்பியபடி நடந்தார்.