PUBLISHED ON : மே 27, 2024 12:00 AM

ஓசூரில் நடந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம் மற்றும் ஓட்டு எண்ணும் முகவர் ஆலோசனை கூட்டத்தில், அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரான, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், 'கடந்த முறை குஜராத், ராஜஸ்தான் போன்ற பல இடங்களில், பா.ஜ., முழு வெற்றி பெற்றது. இம்முறை அந்த வாய்ப்பு இல்லை. கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் பெரிய அளவில், பா.ஜ., வெற்றி பெறாது. ஆனால், 'இண்டியா' கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். கருணாநிதி எப்படி பல பிரதமர், ஜனாதிபதிகளை உருவாக்கினாரோ, அதே போல, இம்முறை முதல்வர் ஸ்டாலின், யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர்' என்றார்.
இதைக்கேட்ட உள்ளூர் கட்சி நிர்வாகி ஒருவர், 'அப்படி நடந்தால் தலைமையிடம் செல்வாக்கு உள்ளவர்கள் மத்திய மந்திரி ஆவார்கள்... நமக்கு என்ன பிரயோஜனம்...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.

