PUBLISHED ON : மார் 30, 2024 12:00 AM

ஸ்ரீபெரும்புதுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார் அறிமுக கூட்டம், பல்லாவரத்தில் நடந்தது. இதில், ஆறு சட்டசபை தொகுதிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சின்னையா பேசுகையில், 'தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, மதுபான ஆலை நடத்தி, மக்களின் உயிரை குடிப்பவர். அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார், மக்களின் உயிரை காப்பாற்றுபவர். மருத்துவம் படித்துள்ள நம் வேட்பாளரை இப்போது எம்.டி., என அழைக்கிறோம். இரண்டு மாதங்களில் எம்.பி., என அழைக்கும் அளவிற்கு களப்பணி ஆற்ற வேண்டும்' என்றார்.
இதைக் கேட்ட கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'பஞ்ச் எல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனால், தொகுதிக்கு சம்பந்தமே இல்லாதவரை களத்துல இறக்கிவிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்குறீங்களே... அவருக்கு ஓட்டு கிடைக்குமா...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.

