PUBLISHED ON : ஏப் 05, 2024 12:00 AM

திருவள்ளூர் -- தனி லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து, பூந்தமல்லியில் நடந்த அறிமுக கூட்டத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், 'அ.தி.மு.க., - --தே.மு.தி.க., கூட்டணி அமைந்தால், தேர்தலில் எப்போதும் மெகா வெற்றி கிடைக்கும். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கானது அல்ல. 2026ல் ஏற்படபோகும் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமானது.
'நம் வேட்பாளர் நல்லதம்பி சொக்கத்தங்கம். ஏழ்மை நிலையில் இருந்த அவருக்கு விஜயகாந்த் சைக்கிள் கடை வைத்துக் கொடுத்தார். பின், எம்.எல்.ஏ., ஆக்கினார். தே.மு.தி.க.,வுக்கு உறுதுணையாக உள்ள நல்லதம்பி வெற்றி பெற வேண்டும். நம்மை எதிர்க்கும் காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்., ஆக இருந்தவர் என்றால், நல்லதம்பி ஐ.எஸ்.ஐ., முத்திரை பதித்தவர்' என்றார்.
கட்சி நிர்வாகி ஒருவர், 'வேட்பாளர் உண்மையில் நல்ல தம்பி தான்... ஆனா, தேர்தலில் முத்திரை பதிப்பாரா...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

