PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட திருக்கோவில்களின் பரம்பரை அறங்காவலர்கள் நலச்சங்க ஆரம்ப கட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடந்தது. இதில், ஓய்வு பெற்ற அறநிலையத் துறை இணை கமிஷனர் செந்தில்வேலவன், பரம்பரை அறங்காவலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அறங்காவலர்கள், அரசுக்கு இடையூறின்றி எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினார்.அப்போது, ஒரு சிலர் கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்ததை பார்த்த செந்தில்வேலவன், 'நீங்கள் எந்த கேள்வியும் கேட்காமல் இருக்கிறீர்களே...' என்றார்.
அதற்கு, 'ஊடக நண்பர்கள் கிளம்பட்டும்... அப்புறம் கேட்கிறோம்...' என, அவர்கள் கூற, செந்தில்வேலவனோ, 'அவர்கள் இருந்தால் என்ன... சும்மா கேளுங்கள்...' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'நம்மள வச்சிக்கிட்டு கேட்க தயங்குறாங்கன்னா கேள்வி வில்லங்கமா தான் இருக்கும்...' என முணுமுணுக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.