PUBLISHED ON : ஜூலை 06, 2024 12:00 AM

கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய சிலர், 'விவசாய பணிக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு அனுமதிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலளித்த கலெக்டர், 'விவசாயிகளுக்கு நீங்க அதிக ஊதியம் கொடுத்தால், அவர்கள் ஏன், 100 நாள் வேலைக்கு போகின்றனர். நீங்கள் ஊதியத்தை உயர்த்திக் கொடுங்கள்' என்றார்.
விவசாயி ஒருவர், 'நம்ம கஷ்டத்தை சொன்னால் கலெக்டர் நமக்கு ஏதாவது உதவி செய்வார்னு எதிர்பார்த்தால், ஆட்களுக்கு சம்பளம் அதிகமா கொடுங்கன்னு ஐடியா கொடுக்கிறாரே... இது நியாயமா...?' என முணுமுணுக்க, மற்றொரு விவசாயி, 'நாம எதிர்பார்க்குற மாதிரி எல்லாம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இப்ப இல்ல... அரசுக்கு ஜால்ரா தான் அடிக்கிறாங்க...' என, புலம்பியபடி வெளியேறினார்.