sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'பரோட்டா மாஸ்டர் ஆகிட்டாங்களே!'

/

'பரோட்டா மாஸ்டர் ஆகிட்டாங்களே!'

'பரோட்டா மாஸ்டர் ஆகிட்டாங்களே!'

'பரோட்டா மாஸ்டர் ஆகிட்டாங்களே!'

1


PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., ஆட்சி குறித்து, அ.தி.மு.க.,வின், ஜெ., பேரவை சார்பில், தமிழகம் முழுவதும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

மதுரை, முனிச்சாலையில் முதல் திண்ணை பிரசாரத்தை, பேரவையின் மாநில செயலரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு துவக்கி வைத்தனர். அப்பகுதி பூக்கடைகள், டீ கடைகள், ஹோட்டல்களில், 'நோட்டீஸ்' கொடுத்தபடியே வந்தவர்கள், பரோட்டா கடையை பார்த்ததும் நின்றனர்.

'சுடச்சுட வாங்கித் தரப் போகின்றனரோ' என, கூடவே வந்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க, உதயகுமார் திடீரென மாஸ்டராகி, பரோட்டா சுட ஆரம்பித்து விட்டார். பரோட்டாவை திருப்பி போட்டவர், 'இப்படி தாங்க, தி.மு.க., ஆட்சியையும் திருப்பிப் போட்டு, அ.தி.மு.க., ஆட்சியை கொண்டு வரணும்' என்றார். இதை அருகில் இருந்த செல்லுார் ராஜுவும் ஆமோதித்தார்.

மூத்த நிருபர் ஒருவர், 'மீண்டும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வர மாஸ்டர் பிளான் போடுவாங்கன்னு பார்த்தா, இப்படி பரோட்டா மாஸ்டர் ஆகிட்டாங்களே...' என, 'கமென்ட்' அடிக்க, அந்த ஏரியாவே கலகலப்பானது.






      Dinamalar
      Follow us