PUBLISHED ON : ஏப் 18, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்சென்னை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தமிழச்சியை ஆதரித்து, சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக், மத்திய பா.ஜ., அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, 'அமித் ஷா தலையில் ஒருவேளை முடி முளைத்தாலும் முளைக்குமே தவிர, தமிழகத்தில் தாமரை மட்டும் மலரவே மலராது...' என்றார்.
இதைக் கேட்டு அனைவரும் சிரிக்க, அமைச்சர் சுப்ரமணியன் தன் தலையை கர்சீப் வைத்து துடைத்தார். இதை கவனித்த கட்சி நிர்வாகி ஒருவர், 'அமித்ஷாவை கலாய்த்து, நம்ம அமைச்சரை நெளிய வச்சுட்டாரே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

