/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'மைக்கை துாக்கி எறிஞ்சிருப்பாரே!'
/
'மைக்கை துாக்கி எறிஞ்சிருப்பாரே!'
PUBLISHED ON : ஏப் 06, 2024 12:00 AM

திருவள்ளூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து, ஆவடி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., நாசர், திருவேற்காடில் ஓட்டு சேகரித்தார். வாகன பிரசாரத்தின் போது, உள்ளூர் கட்சி நிர்வாகிகள் பலரும் பிரசார வாகனத்தில் ஏற முண்டியடித்தனர்.
இதை கவனித்த நாசர், 'நல்லவர்கள் எல்லாம் வண்டியை விட்டு கீழே இறங்குங்கள்; கெட்டவர்கள் எல்லாம் வண்டியில் ஏறுங்கள்...' என்றதும், அங்கு சிரிப்பலை எழுந்தது.
மூத்த நிர்வாகி ஒருவர், 'இவர் சொல்றதை பார்த்தால், வண்டியில் நிற்கும் இவரும், வேட்பாளரும் கூட கெட்டவர் லிஸ்ட்ல சேர்ந்துடுவாங்களே... இப்படியே போய் ஓட்டு கேட்டா விளங்குமா...' என, முணுமுணுக்க, மற்றொரு நிர்வாகி, 'அட நீங்க வேற... ஜாலி மூடுல இருக்கிறதால காமெடியா பேசுறார்... இல்லன்னா அண்ணன் இந்நேரம் மைக்கை துாக்கி எறிஞ்சிருப்பாரே...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

