PUBLISHED ON : ஜூலை 31, 2025 12:00 AM

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரி நீரை பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டு வர வலியுறுத்தி, பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில், கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பேசிய நிர்வாகி ஒருவர், பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், 97 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக சேலம் மாநகராட்சி தெரிவித்தது; ஆனால், எந்த வேலையும் நடக்கவில்லை. அதற்கான செலவு விபரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்றார்.
இதை கேட்ட மூத்த விவசாயி ஒருவர், 'வெள்ளைக்காரன் காலத்துல வெட்டிய ஏரியை, நம்மால ஒழுங்கா பராமரிக்க முடியல. ஒவ்வொரு முறை ஒதுக்கப்படும் நிதியும் எங்க போகுதுன்னும் தெரியல... 110 வருஷத்துக்கு முன்னாடி, வெள்ளைக்காரன் வெட்டிய ஏரிக்கு, இப்ப வரை வெள்ளை அறிக்கை கேட்டுட்டு இருக்கோம்...' என, புலம்பியபடியே அங்கிருந்து நகர்ந்தார்.