தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'புது அணையே கட்டியிருக்கலாம்!'

 'புது அணையே கட்டியிருக்கலாம்!'

 'புது அணையே கட்டியிருக்கலாம்!'


PUBLISHED ON : மார் 27, 2026 03:20 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2026 03:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் தமிழர் கட்சியின், மதுரை மத்திய தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம், பழங்காநத்தத்தில் சமீபத்தில் நடந்தது.

இதில் தலைமை வகித்து பேசிய, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர், சாட்டை துரைமுருகன், 'மதுரையில், அழகர் திருவிழா மட்டும் இல்லையென்றால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் வைகை ஆற்றையே, 'பிளாட்' போட்டு விற்றிருப்பர்.

'மதுரைக்காரர்களுக்கு, வைகை மீது அக்கறையிருந்தால், தி.மு.க., அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு போன்றவர்கள், 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியுமா? அவர்கள் வைத்திருந்த பணத்தில், 100 கோடி ரூபாயை கொடுத்து, வைகை ஆற்றை சுத்தப்படுத்தியிருந்தால், மக்கள் அவர்களை வாழ்த்தியிருப்பர்' என்றார்.

இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'வைகை ஆற்றை சுத்தப்படுத்துறோம்னு, ரெண்டு திராவிட கட்சியினரும் கமிஷன் அடிச்ச பணத்தில், புதுசா ஒரு அணையே கட்டியிருக்கலாம்...' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us