/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'இதெல்லாம் தி.மு.க.,வினர் வேலை!'
/
'இதெல்லாம் தி.மு.க.,வினர் வேலை!'
PUBLISHED ON : மார் 21, 2026 01:06 AM

சென்னை, ராமாபுரம் அரசமரம் சந்திப்பில் அ.தி.மு.க., சார்பில், சமீபத்தில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் பேசினார். தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டிருந்த வேளையில்,திடீரென மின்தடை ஏற்பட்டு, அந்த இடமே சில நிமிடங்கள் இருளில் மூழ்கியது.
சிறிது நேரத்தில் மின்சாரம் வந்தது. பெஞ்சமின் பேச ஆரம்பிக்க, மீண்டும், 'கரன்ட் கட்' ஆனது. இப்படி, ஐந்து நிமிடங்களில் இரண்டு முறை மின்தடை ஏற்பட்டதால், கட்சியினர் கடுப்பாகினர்.
கீழே அமர்ந்திருந்த தொண்டர் ஒருவர், 'பெஞ்சமின் அண்ணன் சூடான பேச்சால, கரன்ட் தானாவே கட் ஆகுதோ...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள், 'அட, நீ வேற... இதெல்லாம் தி.மு.க.,வினர் பண்ற வேலை தான்பா...' எனக் கூற, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

