PUBLISHED ON : பிப் 11, 2024 12:00 AM

சென்னை, பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன், மருமகளால், பட்டியலின பெண் கொடுமைக்கு ஆளான விவகாரத்தை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
தொடர்ந்து, நிருபர்களுக்கு பேட்டிளித்த சீனிவாசனிடம், 'சி.ஏ.ஏ., சட்டம் குறித்து அ.தி.மு.க.,வின் கருத்து என்ன?' என, கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீனிவாசன், 'இந்த விவகாரத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலரும், எங்களின் புரட்சி தலைவருமான அண்ணாமலை ஏற்கனவே அறிக்கை வாயிலாக பதிலளித்து விட்டார்' என, தவறுதலாக தெரிவித்தார்.
இதைக் கேட்டு நிருபர்கள் சிரித்த நிலையில், மூத்த நிருபர் ஒருவர், 'இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மனசுல அண்ணாமலை ஆழமா பதிஞ்சுட்டார்னு தெரியுது...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.

