/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'ஆப்பிள் அலெர்ட்டுக்கும் தாங்கும்!'
/
'ஆப்பிள் அலெர்ட்டுக்கும் தாங்கும்!'
PUBLISHED ON : டிச 19, 2024 12:00 AM

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம்ஏரி, கன மழையால் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த ஏரியை, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார். அமைச்சர் அன்பரசன்,காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது, 'குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, வானிலை மையம் சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளதே... இதை செம்பரம்பாக்கம் ஏரிதாங்குமா?' என, நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு துரைமுருகன், 'ஆரஞ்ச் இல்லை... ஆப்பிள்அலெர்ட் விடுத்தாலும், செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்'என்றார்; இதனால், அங்கு சிரிப்பலை எழுந்தது.
மூத்த நிருபர் ஒருவர், 'அது சரி... இந்த சாமர்த்தியத்தை திருவண்ணாமலை சாத்தனுார் அணையைதிறக்கிறதுக்கு முன்னாடி காட்டியிருக்கலாமே...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.

