தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'போட்டிகள் நடத்த போறாரோ?'

 'போட்டிகள் நடத்த போறாரோ?'

 'போட்டிகள் நடத்த போறாரோ?'


PUBLISHED ON : பிப் 10, 2026 03:15 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 10, 2026 03:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 148 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளின் துவக்க விழா, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சமீபத்தில் நடந்தது. மாணவ - மாணவியருக்கு தனித்தனியே சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.

சிலம்ப போட்டிகளை துவக்கி வைத்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், இடைவேளையின்போது அங்கிருந்த உடற்கல்வி ஆசிரியரிடம் விளையாட்டு விதிமுறைகள், செயல்முறைகள் குறித்து கேட்டறிந்தார். அடுத்து, கோ-கோ போட்டியை பார்வையிட்டவர், போட்டி நேரம் உள்ளிட்ட விதிமுறைகளை பொறுமையாக கேட்ட பின், புறப்பட்டு சென்றார்.

அங்கிருந்த ஆசிரியர் ஒருவர், 'கமிஷனர், இவ்வளவு பொறுமையா விளையாட்டு போட்டிகள் பற்றி கேட்டு தெரிஞ்சிட்டு போறாரே... மாநகராட்சி ஊழியர்களுக்கும் ஏதாவது விளையாட்டு போட்டிகள் நடத்த போறாரோ...?' என முணுமுணுக்க, சக ஆசிரியர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us