PUBLISHED ON : அக் 09, 2024 12:00 AM

நவராத்திரி மற்றும் தீபாவளியை முன்னிட்டு, கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா, சென்னை, பாரிமுனையில் உள்ள குறளகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியை, பால்வளம் மற்றும் கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்துவக்கி வைத்தார். அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் பங்கேற்றனர்.
உற்பத்தியாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்கள் சிலருக்கு ஊக்கத் தொகை, பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், விழாவை அவசரமாக முடித்து விட்டு, பரிசுகள் வழங்காமல் அனைவரும் பரபரப்பாக கிளம்பி சென்றனர்; இதனால், பரிசுகள் பெற காத்திருந்தோர் ஏமாற்றம் அடைந்தனர்.
அவர்களில் ஒருவர், 'இப்படி காலில் தேள் கொட்டியது போல் ஓடுவதற்கு, எதற்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யணும்...' என குமுற, மற்றொருவர், 'உதயநிதி விழா ஏதாவது இருக்கும் போல... அதான் இப்படி ஓடுறாங்க...' என்றபடியே, இடத்தை காலி செய்தார்.

