PUBLISHED ON : அக் 28, 2024 12:00 AM

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கக்கடவு, பழனிக்கவுண்டன்புதுார் பகுதிகளில் சாலை அமைக்க நடந்த பூமி பூஜையில், பொள்ளாச்சி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன் பங்கேற்றார்.
அப்போது கூறுகையில், 'சென்னையில் சுமாரான மழைக்கே மக்கள் திண்டாடினர். 'ரெட் அலெர்ட்' போல கனமழை பெய்திருந்தால், சென்னை மக்கள் சீரழிந்து போயிருப்பர். மழை, வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, மழைநீர் வடிகால் அமைப்பு பணியை மேற்கொண்டது குறித்து, நாம் வெள்ளை அறிக்கை கேட்டால், அதை கொடுப்பதை விட்டு, துணை முதல்வர் உதயநிதி கேலி, கிண்டல் பேசுகிறார்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'மழைக்கு மக்கள் தத்தளித்திருந்தால், அதை வைத்து அரசியல் செய்திருப்பாங்க... ஆக, சென்னையில் மழை பெய்யாததில் இவங்களுக்கு ரொம்ப வருத்தம் இருக்கும் போலிருக்கே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள், ஆமோதிக்கும் வகையில் கமுக்கமாக சிரித்தனர்.

