PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM

ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான,மறைந்த கோதண்டம் படத்திறப்பு விழா, காஞ்சிபுரம்மாவட்டம் குன்றத்துாரில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக, தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர். பாலு,அமைச்சர் அன்பரசன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழா முடிந்ததும் அனைவரும் கிளம்பி விட, செல்வப்பெருந்தகையிடம், பெஞ்சல் புயலின் போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, புயல் என உச்சரிப்பதற்கு பதிலாக, புழல், புழல் என ஊர் பெயரை ஐந்து முறை உச்சரித்தார். இங்குதான் சென்னை மத்திய சிறை உள்ளது என்பதால், தொண்டர்ஒருவர், 'நம்ம தலைவருக்கு புழல் மீது ஏன் இவ்வளவுபாசம்னு தெரியலையே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.