/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'எவ்வளவு வேணும்னாலும் கேளுங்க!'
/
'எவ்வளவு வேணும்னாலும் கேளுங்க!'
PUBLISHED ON : டிச 31, 2025 02:45 AM

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் சமீபத்தில் நடந்தது.
இதில், காளிங்கராயன் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வேலாயுதம் பேசுகையில், '60 வயதான விவசாயிகளுக்கு மாதம், 10,000 ரூபாய் அரசு உதவித் தொகையாக வழங்க வேண்டும் என, இங்கு சிலர் கேட்டனர். ஆனால், அதை விட கூடுதலாக வழங்கணும்' என்றார்.
இதற்கு சிரித்தபடியே பதிலளித்த கலெக்டர் கந்தசாமி, 'ஒரு படத்தில் நடிகர் வடிவேலு, 'நீ யார்கிட்ட கேக்குற, அண்ணன்கிட்ட தானே... கேளு கேளு... அண்ணன் பையில எவ்வளவு இருக்குன்னு உனக்கு தெரியுமா? இன்னும் எவ்வளவு வேணும்னாலும் கேளு...' என்பார். அதுபோல நீங்களும் கேக்குறீங்க. ஆனா, இதை நாங்கள் முடிவு செய்ய முடியாது; அரசுக்கு பரிந்துரைக்கிறோம்' என்றார்.
இதை கேட்ட விவசாயி ஒருவர், 'அதானே, 10,000 என்ன... 20,000 ரூபாய் கூட கேளுங்க... அரசு தரவே தராது என்பதை தான், கலெக்டர் நாசுக்கா சொல்றாரோ...' என முணுமுணுக்க, சக விவசாயிகள் ஆமோதித்தனர்.

