PUBLISHED ON : பிப் 02, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட இடைப்பாடி சட்டசபை தொகுதி நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து, அமைச்சர் உதயநிதி தனித்தனியாகவும், குழுவாகவும் ஆலோசனை நடத்தினார்.
பின், நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி பேசுகையில், 'சேலம் தொகுதிக்கு நான் தான் பொறுப்பு; தலைமை என்னை நம்பி தொகுதியை ஒப்படைத்துள்ளது. யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் கட்டாயம் வெற்றி பெற செய்ய வேண்டும். குறிப்பாக, இடைப்பாடி தொகுதியில் அதிக ஓட்டுகளை பெற்று தர வேண்டும்' என்றார்.
இதைக் கேட்ட நிர்வாகிகள் சிலர், 'சேலம் மாவட்டத்துல நம்ம கட்சி நிர்வாகிகளிடம் உள்ள கோஷ்டி சண்டை தம்பிக்கு முழுசா தெரியாதோ... அதை தீர்த்து வச்சா தான் இதெல்லாம் நடக்கும்...' என, முணுமுணுத்தவாறு நடந்தனர்.

