PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM

நீலகிரி மாவட்டம், குன்னுார் பஸ் ஸ்டாண்டில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் நடந்த மேம்பாட்டு பணிகளை, தமிழக சட்டசபை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கிருந்த கட்டண கழிப்பறை ஆய்வு செய்யப்பட்ட போது, கட்டண விபரம் எழுதாமல்,10 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, வேல்முருகன் கூறுகையில், 'மாணவர் களுக்கு காலை உணவு, மதிய உணவு உட்பட பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்து வரும் நிலையில், கழிப்பறைகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு வசூலித்தால், நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, டெண்டரை ரத்து செய்யலாம்' என்றார்.
அங்கிருந்த முதியவர் ஒருவர், 'எது எதுக்கோ இலவசம் அறிவிக்கிற அரசு, அவசரத்துக்கு ஒண்ணுக்கு, ரெண்டுக்கு போறதுக்கு கறாரா காசு வாங்கலாமா...' என, முணுமுணுக்க, மற்றொரு முதியவர், 'இதுல தானே கட்சிக்காரங்க சம்பாதிக்க முடியும்...' என, புலம்பியபடி நடந்தார்.