/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'தி.மு.க.,விடம் கேட்க முடியுமா?'
/
'தி.மு.க.,விடம் கேட்க முடியுமா?'
PUBLISHED ON : டிச 13, 2025 03:16 AM

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு புதிய சட்டங்களால், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறி, இந்திய கம்யூ., - மா.கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் சார்பில், தர்மபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் அளித்த பேட்டியில், 'தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும், நான்கு புதிய சட்டங்களை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம். அதேசமயம், பா.ஜ.,வின் அருகில் இருந்து கொண்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி அழைப்பு விடுத்துள்ளதால், டிச., 17ல் அவர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை புறக்கணிக்கிறோம்...' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் இவரால, அதை நடத்துங்கன்னு கூட்டணி கட்சியான தி.மு.க.,விடம் கேட்க முடியுமா...?' எனக்கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.

