தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'முயல் எச்சத்தால் மூச்சு திணறுமா?'

'முயல் எச்சத்தால் மூச்சு திணறுமா?'

'முயல் எச்சத்தால் மூச்சு திணறுமா?'


PUBLISHED ON : நவ 26, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, திருவொற்றியூர் தனியார் பள்ளியில் இருமுறை விஷவாயு கசிவு ஏற்பட்டு, மாணவியர் பாதிக்கப்பட்டதாக கூறி, மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளியை மூட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்பதால், பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில், பள்ளி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

இப்ராஹிம் கூறுகையில், 'முதல்முறை வாயு கசிவு ஏற்படவில்லை என, மாசு கட்டுபாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பள்ளி வளாகத்தில், 35 முயல்கள் வளர்ப்பதாக ஆய்வில் தெரியவந்தது. அதன் எச்சங்களாலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. எனவே, அவற்றை அகற்ற உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.

இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'முயல் எச்சங்கள் மூச்சை திணற வைக்குமா...' என பிரமிக்க, மற்றொரு நிருபர், 'கரன்ட் கட்டுக்கு அணில் தான் காரணம்னு சொன்ன கதை மாதிரி இருக்கே...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us