PUBLISHED ON : அக் 25, 2024 12:00 AM

மதுரை விவசாய கல்லுாரி வளாகத்தில், 'அறிவியல் தமிழில் வேளாண்மை' என்ற பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. இதில் பங்கேற்ற வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, மொழியின் சிறப்புகளை விளக்கினார்.
அவர் பேசுகையில், 'ஜப்பானில் ஐந்தாம் வகுப்பு வரை மொழி பாடம் மட்டும் கற்று தரப்படுகிறது. சீனர்கள், ஜப்பானியர்களுக்கு ஆங்கில தொடர்பாற்றல் குறைவாக இருக்கலாம். ஆனால், மொழிக்கு முக்கியத்துவம் தருவதால், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
'நாம் ஆங்கிலம் பேசுவதில் சிறந்தவர்களாக இருந்தாலும், தொழில்நுட்ப புரிதல் கேள்விக்குறியாக உள்ளது. விவசாயத்தை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து, சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளது. எந்த தொழில்நுட்பமும் தாய்மொழியில் வரும்போது எளிதாகும்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'இப்படித்தான் இன்ஜினியரிங்கை தமிழ்ல படிக்கலாம்னு சொன்னாங்க... அப்படி படிச்ச பலருக்கும் வேலை கிடைக்கலையே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

