PUBLISHED ON : ஜன 03, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் கட்டண உயர்வை கண்டித்து, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், மனித சங்கிலி போராட்டம் திருப்பூரில் நடந்தது.
குமரன் சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை, பின்னலாடை தொழில் அமைப்பினர் கரம் கோர்த்து நின்றனர். கலெக்டர் அலுவலகம் முன், தொழில் அமைப்பினரை சந்தித்த பல்லடம் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆனந்தன், 'அவங்களுக்கு ஓட்டு போட்டீங்க... உங்கள இப்படி நடுரோட்டுல கொண்டு வந்து நிறுத்திட்டாங்க பார்த்தீங்களா... அடுத்த தடவை எங்களுக்கு ஓட்டு போடுங்க, உங்களை மேல ஏற்றி வைக்கிறோம்...' என்றார்.
இதை கேட்ட தொழில் அமைப்பு நிர்வாகி ஒருவர்,'இதையே தான் எதிர்க்கட்சியா இருந்தப்ப ஸ்டாலின் சொன்னாரு... இப்ப, இவரும் சொல்றாரு... ஆனா, ஆளுங்கட்சியானதும் மாறிடுவாங்க...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.