தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இவர் படம் பார்த்தாரா, இல்லையா?'

 'இவர் படம் பார்த்தாரா, இல்லையா?'

 'இவர் படம் பார்த்தாரா, இல்லையா?'

1


PUBLISHED ON : ஆக 01, 2026 01:03 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2026 01:03 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், சமீபத்தில் திருச்சியில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் அடுத்து வரும் உள்ளாட்சி, லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், த.வெ.க.,வுடன் எங்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும்.

'முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை பார்த்து, சில அமைச்சர்கள் அழுததை குற்றச்சாட்டாக சிலர் கூறுகின்றனர். சில படங்களை பார்க்கும் போது, அதில் வரும் காட்சிகளால், பலருக்கு கண்ணீர் வரலாம். அதில் என்ன தப்பு? சினிமா பார்க்கும் எத்தனையோ பேர் அழுவதை, நான் பார்த்துள்ளேன். அது, அவர்களின் உணர்ச்சி. அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?' என்றார்.

இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'அமைச்சர்கள் அழுதது இருக்கட்டும்... ஜனநாயகன் படத்தை இவர் பார்த்தாரா, இல்லையான்னு சொல்ல மாட்டேங்கிறாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us