PUBLISHED ON : பிப் 14, 2025 12:00 AM

தஞ்சாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இது தொடர்பாக, தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம், தஞ்சையில் உள்ள தன் வீட்டில் பேட்டி அளித்தார்.
அப்போது கூறுகையில், 'கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பொதுமக்கள், பல்வேறு இடையூறுகளை சந்தித்துள்ளனர். பாஸ் வழங்குவதில், கலெக்டர் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை.
'லட்சக்கணக்கில் நிதி கொடுத்தவர்களுக்கு முறையாக பாஸ் வழங்காமல், தி.மு.க., நிர்வாகிகளுக்கு அதிகமாக வழங்கியிருக்கிறார். கலெக்டர் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆளும் கட்சிக்காரரை போல் இருக்கக் கூடாது. இது என்ன கோவில் கும்பாபிஷேகமா இல்லை, தி.மு.க., கட்சி கூட்டமா? கலெக்டரின் செயல் மோசமான முன்னுதாரணம்' என, ஆவேசமாக கூறினார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இவர் பாஸ் கேட்டு கலெக்டர் தராம போயிட்டாரோ...? இப்படி பொங்குறாரே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

