PUBLISHED ON : ஜன 05, 2024 12:00 AM

மதுரை மாநகராட்சி கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த, மேயர் இந்திராணி, கமிஷனர் மதுபாலன் தலைமையில் நடந்தது.
இதில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சி துணை தலைவர் சோலைராஜா பேசுகையில், 'மதுரையில் எம்.ஜி.ஆர்., விளையாட்டு அரங்கம் வாயிலாக, 4,000த்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த விளையாட்டு அரங்கத்தில், எம்.ஜி.ஆர்., சிலை வைக்க மாநகராட்சி அனுமதியளிக்க வேண்டும். அவ்வாறு மாநகராட்சி அனுமதி அளித்தால், எம்.ஜி.ஆர்., சிலையை, முதல்வர் ஸ்டாலினே கூட திறந்து வைக்கட்டும்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'ஏற்கனவே இவங்க கட்சி இருக்கிற நிலைமையில், எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் கடும் விரக்தியில் இருக்காங்க... இதுல எம்.ஜி.ஆர்., சிலையை ஸ்டாலின் திறந்து, 'பெரியப்பா சிலையை திறந்ததில் மகிழ்ச்சி'ன்னு சொல்லிட்டா, எம்.ஜி.ஆர்., ஆதரவு ஓட்டுகளை தி.மு.க.,வினர் அள்ளிடுவாங்களே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.