PUBLISHED ON : செப் 21, 2026 01:25 AM

தி.மு.க.,வைச் சேர்ந்த, தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் அப்பாவு, சமீபத்தில் திருநெல்வேலியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'முதல்வர் விஜயின் லண்டன் பயணம், முதலீடுகளை ஈர்ப்பதற்கான முறையான வழிகாட்டுதலின்படி அமையவில்லை. தமிழகத்தின் தற்போதைய பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கு, முந்தைய தி.மு.க., ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அடித்தளமே காரணம்.
'முந்தைய தி.மு.க., ஆட்சியில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததை ஊழல் என்றனர். தற்போது, 20 - 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இந்த ஆட்சியிலும் ஊழலும், லஞ்சமும் அதிகரித்துள்ளன' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'இந்த ஆட்சியிலும் ஊழல் அதிகரிச்சிருக்கு என்றால், கடந்த தி.மு.க., ஆட்சியிலும் ஊழல் நடந்துச்சுன்னு ஒப்புக் கொள்கிறாரோ?' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.
