PUBLISHED ON : ஆக 30, 2026 01:50 AM

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் சமீபத்தில் திருநெல்வேலி வந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், 'தமிழகத்தை தாண்டி, விஜயின் அரசியல் தாக்கம் அதிகரித்துள்ளது. இது, 2029 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும். 'இண்டியா' கூட்டணி, 2029ல் ஆட்சி அமைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதில், த.வெ.க.,வும் இணைந்து பயணிக்கும். 2029ல் பிரதமர் யார் என்பதை, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவு செய்வர்.
'அரசியலமைப்பு சட்டம், நல்லிணக்கம், சமூக நீதியை காக்கும் நல்லாட்சி, 2029ல் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த ஆட்சியில் முஸ்லிம் லீக், த.வெ.க., - காங்., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து செயல்படும்' என்றார்.
இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'மாநிலம் மாதிரியே, மத்திய ஆட்சியிலும் பங்கு பெறணும்னு நினைக்கிறாரோ?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.
