/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'நம்மை விட நாய்கள் புத்திசாலிகள்!'
/
'நம்மை விட நாய்கள் புத்திசாலிகள்!'
PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM

சென்னை மாநகராட்சியின், திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. இதில், மண்டல உதவி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராஜகுமாரி பேசுகையில், 'என் வார்டில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. நாய் பிடிக்கும் வாகனம் காலையில் வருகிறது. அந்த நேரம் நாய்கள் வெளியில் வருவதில்லை. மாறாக, வெயில் குறைந்ததும், மாலை, 4:00 மணிக்கு பின்பாகவே, சாலையில் சுற்றி திரிகின்றன. எனவே, மாலை நேரங்களில், நாய் பிடிக்கும் வாகனம் வந்தால் சரியாக இருக்கும்...' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'நம்மை விட நாய்கள் புத்திசாலிகளா மாறிட்டு வருதுங்க... தங்களை பிடிக்கிற வாகனத்தை துாரத்தில் பார்த்தாலே, எங்கேயாவது சந்து பொந்துகள்ல புகுந்து பதுங்கிடும்...' என கூற, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.