PUBLISHED ON : செப் 19, 2024 12:00 AM

சென்னை, தண்டையார்பேட்டையில் நடந்த, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், விருதுநகர் காங்., - எம்.பி.,மாணிக்கம் தாகூரின் ஆதரவாளரான மாவட்ட தலைவர்திரவியம் தலைமை வகிக்க, மூத்த தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, கன்னியாகுமரி எம்.பி.,விஜய்வசந்த், வேளச்சேரி எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு, வடசென்னை மாவட்ட நிர்வாகி கனி, கை சின்னம் பொறித்த செங்கோல், பாதயாத்திரைசெல்ல, 1 லட்சம் ரூபாய் நிதி வழங்க முயன்றார்.
இதற்கு, தன்னிடம் முன் அனுமதி பெற்று வழங்க வேண்டும் என, திரவியம் மல்லுக்கட்ட, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது; மூத்த நிர்வாகிகள் பேசி சமரசம் ஏற்பட்டது.
பார்வையாளர் ஒருவர், 'காமராஜர் ஆட்சி அமைக்கும்லட்சியத்தை இவங்க மறந்தாலும், வேஷ்டி கிழிப்பு, கோஷ்டி மோதலை மட்டும் இன்னும் மறக்கலை...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

