PUBLISHED ON : ஜூலை 23, 2025 12:00 AM

திருச்சி மாவட்டம், விரகலுாரில் தனியார் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தி.மு.க., - எம்.பி., கனிமொழி பங்கேற்றார்.
அவர் பேசும்போது, 'சாமானிய மக்களின் உரிமைகளை, மக்களுக்காக போராடுபவர்களின் உரிமைகளை பறிக்கும் ஆட்சி தான் மத்தியில் நடக்கிறது. மக்களின் வாழ்விடத்தை கூட ஒரு கார்ப்பரேட் கம்பெனி தான் முடிவு செய்யும் என்ற நிலையை உருவாக்கி உள்ளனர். இதை எதிர்த்து தான், தமிழக முதல்வர் தொடர்ந்து போராடி வருகிறார்; அந்தப் போராட்டத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்.
'இந்த போராட்டத்தை இன்னொரு விடுதலை போராட்டமாகத் தான் பார்க்க வேண்டும். தேர்தலை கடந்து, ஒரு தலைமுறைக்கான விடுதலையை நாம் முன்னெடுக்க வேண்டும்...' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'மாநில அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள்னு பலரும் போராடுவது இவங்களுக்கு தெரியாதோ...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.