sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/'நீலகிரியை தக்கவச்சா போதும்!'

'நீலகிரியை தக்கவச்சா போதும்!'

'நீலகிரியை தக்கவச்சா போதும்!'


PUBLISHED ON : பிப் 25, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவையில், பில்லுார் - 3 குடிநீர் திட்ட துவக்க விழாவில், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நீலகிரி தொகுதி தி.மு.க., - எம்.பி., ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராஜா பேசுகையில், 'தண்ணீர் இல்லாத ஊருக்கு பெண் கொடுக்க மாட்டார்கள் என்று நேரு பேசினார். நேருவின் முரட்டு மீசையை பார்த்து பெண் கொடுக்க எல்லாரும் பயந்த போது, எங்கள் ஊரில் இருந்து தான் பெண் கொடுத்தோம்.

'நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்துக்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளனர். பெரம்பலுார் குடிநீர் திட்டத்துக்கு, 300 கோடி ரூபாய் கொடுப்பதாக சொல்லி இருந்தீர்கள். அதையும் ஒதுக்க வேண்டும்' என்றார்.

இதைக் கேட்ட கட்சி நிர்வாகி ஒருவர், 'பெரம்பலுார், திருச்சியை நேரு பார்த்துக்குவார்... நீலகிரியை இவர் தக்க வச்சா போதும்...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us