தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'சின்னத்தை பார்த்து பயம்!'

 'சின்னத்தை பார்த்து பயம்!'

 'சின்னத்தை பார்த்து பயம்!'


PUBLISHED ON : மார் 28, 2026 03:33 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 28, 2026 03:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, அம்பத்துாரில், தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.

இதில் அவர் பேசுகையில், 'தேர்தல் நேரத்திலாவது நிர்வாகிகள், சூரியன் உதயமாவதற்கு முன் எழுந்து பணியாற்ற வேண்டும். எந்த சூழலிலும், உதயசூரியன் தான், அதாவது, நம் கட்சிதான் அம்பத்துார் தொகுதியில் போட்டியிடும். முதல்வர் கை காட்டுபவரே வேட்பாளர்; அவரை சட்டசபை உறுப்பினராக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும்' என்றார்.

இதை கேட்ட நிர்வாகி ஒருவர், 'அதுவும் சரிதான்... இப்ப அடிக்கிற வேகாத வெயில்ல, சூரியன் உதயமாகிட்டா, வேர்த்து, விறுவிறுத்து தொண்டர்கள் களைப்பாகிடுறாங்கப்பா...' என்றார்.

இதை கேட்ட சக நிர்வாகி, 'நம்ம கட்சி சின்னத்தை பார்த்து நாமே பயப்பட வேண்டியிருக்கே...' என, 'கமென்ட்' அடிக்க, அங்கு சிரிப்பலை பரவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us